வெளிநாட்டு செய்திகள்

‘புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் மான்களிடம் உண்டு’

மான்கள் புற்றுநோயால் உயிரிழப்பது குறைவு எனவும் புற்று நோய்க் கட்டியைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களை மான்கள் கொண்டிருப்பதே இதற்கு காரணம் எனவும் சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சீனப்பல்கலைக்களம் மேற்கொண்ட மேற்படி ஆய்வு முடிவுகள் ‘Science’ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

மான்கள் ஆண்டுதோறும் புதிய கொம்புகளை வளர்த்துக் கொள்ள புற்றுநோய் தொடர்பான மரபணுக்கள் உதவுகின்றன.

உடல் முழுவதும் புற்றுநோய் கட்டிகள் காணப்பட்டாலும் அவற்றால் மான்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உறுப்புப் புதுப்பித்தல், புற்றுநோய் சிகிச்சை ஆகியவற்றுக்கு இந்த ஆய்வு புதிய பாதைகளைத் திறக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மான்களால் ஓர் உறுப்பை முழுமையாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும். வேறு எந்தப் பாலூட்டிக்கும் இல்லாத தனிச் சிறப்பு மானுக்கு உண்டு என Northwestern Polytechnical பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைத்தியர் வாங் வேன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க