விளையாட்டு செய்திகள்

கோபா அமெரிக்க கால்பந்து-பெருவை மிரள வைத்த பிரேசில்

கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் முன்னாள் சம்பியன் பிரேசில் அணி 5–0 என்ற கோல் கணக்கில் பெருவை மிக சுலபமாக தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை சாவ்பாலோ நகரில் இடம்பெற்ற ஆட்டத்தில் 8 முறை சம்பியனான பிரேசில் அணி, பெருவை (ஏ பிரிவு) எதிர்கொண்டது.

உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் களம் புகுந்த பிரேசில் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. பந்து பெரும்பாலான நேரம் பிரேசில் பக்கமே (69 சதவீதம்) வலம் வந்தது.

அடுத்தடுத்து 5 கோல்களை அடித்த பிரேசில் அணியினர் பெருவை மிரளவைத்தனர். முடிவில் பிரேசில் 5–0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை சாய்த்தது. இதன் மூலம் பிரேசில் கால் இறுதிக்கான தகுதியை பெற்றுள்ளது.

இதேவேளை இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெனிசுவேலா அணி 3–1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது.

கருத்து தெரிவிக்க