இனப் பிரச்சினைக்கான தீர்வுக் காணப்படாவிட்டால் ஒருபோதும் நாட்டில் நல்இணக்கத்தை ஏற்படுத்த முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வைக் காண்பது என்பது சிரமமான ஒன்று அல்ல. ஆனால் அரசாங்கம் அதனை விரும்பிச் செய்ய முன்வருவதில்லை. இந்த நிலையில், அரசியல் தீர்வை தாமதிக்க வேண்டிய அவசியமும் இல்லை எனவும் அவர் கூறினார்.
தமிழ், சிங்கள ஊடகங்கள் இந்த விடயத்தில் சரியான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டைப் பிரிப்பதைத் தவிர்ப்பதற்கு ஒரேயோரு வழி அதிகாரப் பகிர்வேயாகும். அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுவதன் மூலம் நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் திருப்தியடைவார்களாக இருந்தால் நாட்டைப் பிரிப்பதற்கு வழியிருக்காது எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
கருத்து தெரிவிக்க