முகத்தை முழுமையாக மறைக்கும் கலாசாரம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த வந்தது என செய்யப்பட்டதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சைப் பதவியை மீண்டும் பொறுப்பேற்றுள்ள அவர் தனது காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கை பெண்கள் பணிப்பெண்ணாக சென்றதால் அந்த நாடுகளில் உள்ள முகத்திரை அனுபவங்களை இந்த நாட்டில் அறிமுகப்படுத்தியதால் அவை பாவனைக்கு வந்ததாகவும் மாறாக அது இஸ்லாம் மதத்தில் உள்ளதொரு விடயம் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அண்மைய காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதொன்று. தான் சிறுவனாக இருந்தபோது தனது தாயார் இவ்வாறான உடைகளை அணிந்ததில்லை புடவை முந்தானையிலேயே தலையை மூடுவார் எனவும் ஹலீம் சுட்டிக்காட்டினார்.
கருத்து தெரிவிக்க