இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருந்ததா? என்பதை இன்னும் விசாரணையாளர்கள் கண்டறியவில்லை.
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் இலங்கை அதிகாரி ஒருவரை கோடிட்டு இந்த செய்தி சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
தாக்குதல்களை மேற்கொண்ட உள்ளூர் ஜிஹாத்திகள் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்புகளை கொண்டிருந்தார்களா? என்பதற்கான சாட்சியங்களை விசாரணையாளர்கள் இதுவரை கண்டறியவில்லை.
எனினும் விசாரணையின்போது உள்ளூரில் உள்ள ஜிஹாத்தியரும் ஐஎஸ் பயங்கரவாதிகளின் அனுதாபியுமான ஒருவர் (தற்போது தடுப்புக்காவலில் உள்ளவர்) இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு அறிவித்துள்ளார் என்ற விடயம் வெளியாகியுள்ளது
இதன்ன பின்னர் 48 மணித்தியாலங்கள் கழித்தே ஐஎஸ் அமைப்பு இலங்கையின் தாக்குதல்களுக்கு உரிமைக்கோரியதாக அமாக் செய்தி சேவை செய்தி வெளியிட்டது.
இதேவேளை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆய்வாளர் ஒருவரின் கூற்றுப்படி அந்த அமைப்பு தாக்குதல் ஒன்று இடம்பெற்ற பின்னர் தாமதித்து அதற்கான உரிமையை கோருவதில்லை என்ற செய்தியையும் சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து தெரிவிக்க