ஹப்புத்தளை ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இவர் நேற்று ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கிராமத்தவர்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் கையளிக்கப்பட்டார்.
இதன்போது அவர் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்தார்.
இந்தநிலையில் அவர் பின்னர் பண்டாரவளை நீதிமன்றத்தினால் 100.000 ரூபா இரண்டு சரீர பிணைகளிலும் 5000 ரூபா ரொக்கப்பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கருத்து தெரிவிக்க