வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கி 9 பேர் பலி :

மத்திய பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஹவாய் பிரதேசத்தில் தனியாருடைய விமானம் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஹவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள ஓவாஹு வின் தலைநகர் ஹோனோலுலு . இங்குள்ள டில்லிங்ஹாம் விமானத் தளத்தின் அருகே பறந்து கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான விமானம், அமெரிக்க நேரத்தின் படி நேற்று காலை 6.30 மணிக்கு விழுந்து நொறுங்கி எரிந்து சாம்பலாகியது. இந்த விபத்தில் 9 பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க