நேற்று (மார்ச் 27) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இணை சுகாதார அறிவியல் பீட மாணவர் சங்கத்தினர் 27 பேர் சுகாதார அமைச்சிற்கு முன்பாக முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் குறித்து பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நீதிமன்றம்,
மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை சதுக்கம்,சுகாதார அமைச்சிற்கு உட்பிரவேசிக்கும் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.
அதற்கிணங்க குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இணை சுகாதார அறிவியல் பீட மாணவர் சங்கத்தினர் நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனரென கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க