“எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் அதில் எமது அணியே வெற்றிபெறும். புதிய ஆட்சி விரைவில் மலரும் .” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச சூளுரைத்தார்.
தேசிய சுதந்திர முன்னணியால் விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” 21/4 தாக்குதல் தொடர்பில் பொறுப்புகூறும் கடப்பாட்டிலிருந்து அரசாங்கம் தப்பிக்கமுயற்சிக்கின்றது. இதன்காரணமாகவே எல்லா பொறுப்பையும் அதிகாரிகள்மீது திணிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
21/4 தாக்குதலால் முஸ்லிம் மக்களே இன்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அடிப்படைவாதிகளை புனர்வாழ்வுக்குட்படுத்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும்.
யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்தோம். இன்று நிம்மதி பறிபோயுள்ளது. எனவே, நாட்டை நேசிக்கும் தலைவரொருவர் அவசியம். இன்னும் 4 மாதங்களில் இந்த அரசின் ஆயுட்காலம் முடிவடைந்துவிடும்.
எந்த தேர்தல் வந்தாலும் நாம் வெற்றிபெறுவது உறுதி. எமது ஆட்சியின்கீழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.” என்றார் மஹிந்த.
கருத்து தெரிவிக்க