தென் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானா வின் வட பகுதியில் இருக்கும் காட்டினுள் வேட்டையாடப்பட்ட 3 யானைகளின் உடலைத் தின்ற 537 கழுகுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உள்ளது.
பொதுவாக கழுகுகள் பிற பறவைகள், மிருகங்களின் உடல்களை உண்பது வழக்கம். எனினும் இந்த யானைகளின் உடலைத் தின்ற கழுகுகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்த கழுகுகளில் 468 அழிந்து வரும் வெண் முதுகு கொண்ட கழுகுகள் எனவும், 2 டவினி எனப்படும் அரிய வகை கழுகுகளும் , 17 வெண் தலை கழுகுகளும் , 28 ஹுட் என்ற வகையைச் சேர்ந்த கழுகுகளும் உயிரிழந்துள்ளன.
இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் வேட்டையாடப்பட்ட யானைகளின் உடலில் நச்சுத்தன்மை கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. வேட்டைக்காரர்கள் யானையின் உடலில் விசத்தைச் செலுத்தி கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க