இத்தாலியில் உள்ள ‘பைசா’ கோபுரம் உலகின் அதிசயங்களில் ஒன்று. இக் கோபுரம் தேவாலயத்தின் அருகில் அதன் மணிக்கூண்டாக கட்டப்பட்டதாகும்.
இக் கோபுரத்தின் கட்டிட வேலைகள் கி.பி 1173 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இதனைக் கட்டி முடிக்க கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆரம்பத்தில் இருந்து இக் கோபுரம் வலப்புறமாக சாயத் தொடங்கி விட்டது. அதனைத் தடுக்கும் வகையில் கோபுரத்தின் உச்சியில் 3 அடுக்குகளைக் கட்டினார்கள். ஆனால் அதுவும் பலனின்றி தொடர்ந்து சாய்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சாய்ந்து கொண்டு இருக்கும் இக் கோபுரம் ஒரு நாள் முற்றாக சாய்ந்து தரையில் வீழ்ந்து விடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க