யோக முத்திரைகள் என்பது யோகக் கலையின் ஒரு பகுதியாகும். இந்த முத்திரை பயிற்சிக்கு கைவிரல்களே மூலதனம்.
நமது உடலின் அமைப்பு மிக அற்புதமானது. நாம் உட்கொள்ளும் உணவை இரத்தமாக மாற்றி பின் சக்தியாக மாற்றக் கூடிய சிறப்பான ஆற்றல்களை கொண்டது. அது மட்டுமன்றி உடலில் ஏற்படும் பாதிப்புகள் சிலவற்றை தானே நீக்கிக் கொள்ளும் அளவிற்கு ஆற்றலையும் கொண்டது. இந்த யோக முத்திரைகள் மூலம் விரல் நுனிகளை சேர்த்துக் கொள்வதால், சக்திகளை மூளைக்கு அனுப்பி உடலில் உள்ள சுரப்பிகளை ஒழுங்கான முறையில் சுரக்கச் செய்வதால் நம் உடலுக்குள் இருக்கும் பஞ்ச பூதங்கள் சரியான முறையில் இயங்கும் . இதனால் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக பெற்றுக் கொள்கிறது.
நமது விரல்கள் ஒவ்வொன்றும் பஞ்ச பூதங்களுடன் தொடர்புடையன. அவை,
பெருவிரல்….. நெருப்பு
சுட்டு விரல்….. காற்று
நடுவிரல்……… ஆகாயம்
மோதிர விரல்…. நிலம்
சின்னவிரல்……. நீர்
யோக முத்திரை வகைகள், செய்யும் முறைகள். அதன் பலன்கள், பற்றி அறிய எமது பக்கத்தை தொடர்ந்து பாருங்கள்.
கருத்து தெரிவிக்க