உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

‘சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் திருப்திகரமாக இடம்பெறுகிறது’

மட்டக்களப்பு நகரில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் சேதமான சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் திருப்திகரமாக இடம்பெறுவதாக தேவாலயத்தின் பிரதம போதகர். ரொசான் மனோஜ் மகேசன் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பணிப்புரைக்கமைய முழுக்க எமது நிருவாகத்தின் ஆலோசனையில் இராணுவப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புனரமைப்புப் பணிகளுக்கு  நிர்மாணத்துறை அமைச்சினால் முதல்கட்டமாக 2 கோடியே 80 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 32 குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுவசதிகளை வழங்கவும் அதில் 22 குடும்பங்களுக்கு இலவசமாக காணி வசதியும் கொண்ட வீடுகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 32 குடும்பங்களுக்கு வீடுகளை பூர்த்தி செய்யவும் நிதி வழங்கவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ நடவடிக்கை எடுத்துள்ளார் என போதகர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க