ரஷ்யாவின் வட பகுதியில் சைபீரியாவில் உள்ள நோரில்ஸ்க் என்ற நகருக்குள் பசியால் வாடிய பனிக் கரடி ஒன்று சுற்றி திரிகிறது.
ஆர்டிக் பனிப் பகுதியில் ஏற்பட்ட கால நிலை மாற்றம் காரணமாக தேவையான இரை கிடைக்காமல் 100 கி. மீ தூரம் கடந்து இந்த பனிக் கரடி ஊருக்குள் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இரை தேடி திரியும் இந்த கரடியை மக்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பது மட்டுமல்லாது , சிலர் கரடியுடன் புகைப்படமும் எடுக்கின்றனர். அந்த கரடியை பிடித்து அதன் இருப்பிடத்தில் கொண்டு போய் விடுவதற்கான ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு விட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
40 வருடங்களுக்கு பின்னர் பனிக் கரடி மீண்டும் ரஷ்ய நகருக்குள் நுழைந்துள்ளதாக வனவிலங்குகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க