இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கதே யும் லண்டனில் இருந்து வின்சர் மாளிகைக்கு காரில் சென்றனர். அவர்களின் பாதுகாப்பிற்காக பொலிசார் முன்னும் பின்னும் வாகனங்களில் அணி வகுத்துச் சென்றபோது, அரச தம்பதியினரின் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று பாதை மாறிச் சென்று விட்டது. இதன் போது அந்த வாகனம் , வீதியை கடக்க முயன்ற வயோதிப பெண் ஒருவரை இடித்து மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். ஜரீன் மேயர் என்ற அந்த பெண்மணிக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும், தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பாக வருத்தம் தெரிவித்த அரச தம்பதியினர் அவருக்கு மலர் கொத்துகளை அனுப்பி வைத்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க