உங்களுடைய அழகை எடுத்து காட்டுவதில் முகம், கன்னங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், கன்னங்கள் ஒட்டிப் போய் களையிழந்து காணப்படுவதால் , அழகினை குறைத்து காட்டும். இதற்கென்று வீட்டில் இருந்து செய்யக் கூடிய சில எளிய பயிற்சிகள் இருக்கிறது. அதனை இரண்டு மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் கன்னங்கள் குண்டாகி கவர்ச்சியாக இருக்கும்.
ஒரு கதிரையில் அமைதியாக இருந்து உங்கள் உதடுகளை மூடிக் கொள்ளுங்கள். பின்னர் இரு கன்னங்களையும் உறிஞ்சுவதைப் போல உள் பக்கமாக இழுங்கள். அதன்பின் இழுத்த கன்னச் சதைகளை மெதுவாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு 15 முறை செய்து வர வேண்டும். ஒவ்வொரு நாளும் 3 அல்லது 4 தரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உங்கள் வாயில் எவ்வளவு காற்றை நிரப்ப இயலுமோ நிரப்பி கொண்டு, காற்றை வெளியே விடாமல் சில நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள் . பின் காற்றை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றவும். இவ்வாறு 15 அல்லது 20 தரம் செய்து வாருங்கள். இதனை காலை வேளையில் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
கருத்து தெரிவிக்க