வெளிநாட்டு செய்திகள்

சிரியாவில் மோதல் : 130 பேர் பலி

சிரிய அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் 130 பேர் பலியாகி உள்ளனர்.

2011ஆம் ஆண்டிலிருந்து கடந்த 9 வருடங்களாக சிரியாவில் அந்நாட்டு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள் நாட்டு போர் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த போரால் குழந்தைகள் உட்பட 3 இலட்சத்து 70 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளதோடு, இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

சிரியாவில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி கடந்த பல மாதங்களாக தாக்குதல்கள் எதுவும் இடம் பெறவில்லை. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் தொடக்கம் தாக்குதல்கள் இடம் பெற தொடங்கி விட்டன. இதில் அரசாங்கத்திற்கு எதிராக ஐ.எஸ் பயங்கரவாதிகளும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒழிக்கும் பொருட்டு ரஷ்யாவின் இராணுவ படையினர் சிரிய அரசுக்கு ஆதரவாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த செவ்வாய் கிழமையிலிருந்து சிரிய, ரஷ்ய போர் விமானங்கள் கடுமையான வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் இரண்டு தரப்பினரும் பலியாகி உள்ளனர்.

கடந்த 48 மணித்தியாலங்களில் 130 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அரச தரப்பினர் 41 பேரும் , கிளர்ச்சியாளர்கள் 89 பேரும் பலியாகி உள்ளனர். அதைத் தவிர பொதுமக்கள் 17 பேரும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

கருத்து தெரிவிக்க