உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களை தடுப்பதில் அக்கறை செலுத்தாத 9 காவல்துறை அதிகாரிகளிடம் குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் பதில் காவல்துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையை கருத்திற்கொண்டே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு, மேல் மாகாண, நீர்கொழும்பு, கொழும்பு வடக்கு, நீர்கொழும்பு மூன்றாம் பிரிவு, நீர்கொழும்பு நான்காம் பிரிவு, கட்டான பொறுப்பதிகாரி, ஜெம்பட்டா காவல்துறை பொறுப்பதிகாரி ஆகியோரே விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
கருத்து தெரிவிக்க