உள்நாட்டு செய்திகள்

 ‘இலங்கை தாக்குதல்களின் பின்னணியில், சிரியாவின் பயங்கரவாதிகள்’  

இலங்கை பயங்கரவாத தாக்குதல்கள், சிரியா மற்றும் ஈராக்கில் செயற்பட்ட ஐ.எஸ் போராளிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இடம்பெற்ற உயர்மட்ட பாதுகாப்பு பிரதிநிதிகள் பங்கேற்ற 10  வது சர்வதேச பாதுகாப்பு கூட்டத்தில் ரஷ்ய பாதுகாப்பு சபை  பிரதி செயலாளர் யூரி கோகோவ் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஐ எஸ்ஸை அடிப்படையாக   கொண்ட ஜிகாடிகளின் உள்ளூர் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் போரில் ஈடுபட்டு நாடுதிரும்பிய ஐ.எஸ் பயங்கரவாதிகளால்   இதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகள் பிரதானமாக செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில், ஐ.எஸ்  பயங்கரவாதிகள் அதன் ஆதரவாளர்களை ஈராக் மற்றும் சிரியாவுக்கு செல்லுமாறு அழைப்பு விடுத்தனர், இருப்பினும், தற்போது அவர்கள் தங்கியிருக்கும் நாடுகளில்  தங்கவும்  போரை தொடரவும் உத்தரவிடப்பட்டுள்ளது என கோகோவ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க