வெளிநாட்டு செய்திகள்

சபரிமலை கோயில் விவகாரம்- மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை

ஐயப்பன் கோயில் விவகாரத்தில் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக கேரள மாநிலம் எம்.பி. என்.கே.பிரேம சந்திரன் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை கொண்டு வந்துள்ளார்.

இது, இந்த வாரம் விவாதத்துக்கு வரவுள்ள நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் அளித்த செவ்வியில் கூறியதாவது,

சபரிமலை விவகாரம், தனிநபர் பிரேரணை மத்திய அரசின் முன்பு வைக்கப்பட்டுள்ளது.  தனிநபர் பிரேரணைகளின் கதி என்னவாகும் என்பது அனைவருக்கும் தெரியும்.

அத்தகைய சூழ்நிலை எழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க மத்திய அரசு பிரேரணை கொண்டுவர வேண்டும் என அவர் கூறினார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை அமுல்படுத்த கேரளாவை ஆளும் கட்சி அரசு முடிவு செய்தது.

அதற்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க