சினிமா

ஒப்பனைக்கு அதிக நேரம் எடுத்தது -தீபிகா

அசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தில் நடிக்க பல மணிநேரம் ஒப்பனை செய்யப்பட்டதாக நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.

இந்தியா டெல்லியில் அசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் வாழ்க்கையை மையமாக வைத்து தீபிகா தயாரிப்பில் இந்த படம் உருவாகிறது. இதில் லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறார்.

‘சபாக் படம் எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் சிறந்த படமாக இருக்கும். எனது ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆயிரம் கண்களுடன் காத்து இருக்கிறார்கள். இந்த படத்தில் ஒப்பனை செய்ய பல மணிநேரம் ஒதுக்க வேண்டி இருந்தது’ என சபாக் படம் குறித்து தீபிகா படுகோன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க