இங்கிலாந்து அணியின் இயான் மோர்கன் கிரிக்கட்டில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி தொடரில் மேன்செஸ்டரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற 24–வது லீக் ஆட்டத்தில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார்.
இங்கிலாந்து ஆப்கானிஸ்தானுக்கிடையிலான இந்த போட்டியில் 71 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்களையும், 17 ஆறு ஓட்டங்களையும் பெற்று 148 ஓட்டங்களை சேர்த்தார்.
இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் 17 ஆறு ஓட்டங்களை அடித்து இயான் மோர்கன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த வெற்றிக்கு பிறகு இயான் மோர்கன் அளித்த பேட்டியில், ‘இதுபோன்று அதிரடியாக ஆடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது. அதிக 6 ஓட்டம் அடித்து உலக சாதனை படைத்தது எனக்கு புதுமையான அனுபவமாக இருந்தது.
கடந்த 4 வருடங்களாக நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். ஆனாலும் 50 அல்லது 60 பந்துகளில் சதம் அடித்தது கிடையாது. இந்த திறமை எனக்குள் எங்கோ முடங்கி கிடந்து இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க