முஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களை கூறிய தேரருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அஸ்கிரிய பீடத்தின் சியாம் பிரிவு பிரதம குரு- வரக்காகொட ஸ்ரீ ஞானரட்ன தேருக்கு எதிராகவே இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிங்களவர்கள் முஸ்லிம்களின் வியாபாரத்தளங்களை புறக்கணிக்கவேண்டும்.
சர்ச்சைக்குரிய வைத்தியரை கல் எறிந்து கொல்ல வேண்டும் போன்ற கருத்துக்களை பௌத்த பிக்கு வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ச டி சில்வா ஆகியோர் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
பௌத்த மதம் சமாதானத்தையே வலியுறுத்துவதாக அமைச்சர் மங்கள குறிப்பிட்டுள்ளார்.
எந்த இடத்திலும் மற்றவர் மீது கல்லெறியக்கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவியுடை அணிந்துள்ள பௌத்த பிக்குமார் சிலருக்கு அறிவுரைகள் வழங்கப்படவேண்டும் என்று ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க