பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் அந்நாட்டு பிரஜை ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
உலக கிண்ண தொடரின் இந்திய பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்த நிலையில் இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலாவில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், சர்பராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இன்சமாம் உல் ஹாக் தலைமையிலான தேர்வுக் குழுவைக் கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாக விளக்கமான பதில் அளிக்கக் கோரி பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்திற்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்தின் ஆட்சி மன்றக் குழு கூடி, அணியின் மேலாண்மையில் முக்கிய மாற்றங்களை செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
அணியின் தேர்வுக் குழுவினர் மற்றும் பயிற்சியாளர்கள் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க