விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட்டில் அவுஸ்திரேலியா–பங்களாதேஷ் இன்று மோதல்

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நோட்டிங்காமில் இன்று நடைபெறும் 26–வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான அவுஸ்திரேலிய அணி, பங்களாதேஷை சந்திக்கிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 4–ல் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ளது.

பங்களாதேஷ் அணி 5 ஆட்டங்களில் போட்டியிட்டு 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு போட்டி ரத்து என்ற நிலையில் என்று 5 புள்ளிகளை பெற்றுள்ளது.

உலக கிண்ண தொடரில் தென்ஆப்பிரிக்கா, மேற்கிந்தியா ஆகிய பலமான அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து பங்களாதேஷ் வெற்றிகண்டுள்ள நிலையில் இன்றைய போட்டி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்து தெரிவிக்க