அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு தொகுதி அமைப்பாளர் பதவி வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (20) சிறிகொத்தவில் கூடியது.
இதன்போது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு மஹரகம தொகுதி அமைப்பாளர் பதவியை வழங்கும் யோசனையை ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பை வெளியிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி அல்லாத உறுப்பினர் ஒருவருக்கு தொகுதி அமைப்பாளர் பதவியை வழங்குவதானது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து இவ்விவகாரம் குறித்து தீர்மானம் எடுக்கப்படாமல், அடுத்த செயற்குழு கூட்டத்தில் ஆராய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க