பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தின் ஏற்பாட்டில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த விசேட கலந்துரையாடல் இன்று புதன்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தலைமையில் இடம்பெற்றது.
மன்னாரில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் முப்படையிரின் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர், மன்னார் பகுதிகளில் இடம்பெற்றுவரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் முஸ்லிம் மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
கருத்து தெரிவிக்க