கொழும்பு – புளுமென்டல் வீதி போ(B)தி சந்தி தொடக்கம் சான்த்த ஜேம்ஸ் சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் குழாய்களை இடுதல் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 05 மணி வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 28 ஆம் திகதி இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 05 மணிவரையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க