முல்லைத்தீவு மாவட்டத்தில் வெற்றி பெற்ற நெய்தல் இயற்கை உர தயாரிப்புத் திட்டத்தை பார்வையிட இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை காரியாலய அதிகாரிகள் குழு கள்ளப்பாடு தெற்கு கிராமத்திற்கு சென்றுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் முகமாக மேற்கொண்டு வருகின்ற ‘youth with talent ‘ வேலைத்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றது
அந்த வகையில் கடந்த வருடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது.
இதில் இளைஞர்களுக்கும் பலனளிக்கக் கூடிய மிகச் சிறந்த திட்டமாக முல்லைத்தீவு கரைதுறைப்பற்ற கள்ளப்பாடு தெற்கு கிராமத இளைஞர்களின் நெய்தல் இயற்கை உர தயாரிப்புத் திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் தேசிய ரீதியில் வெற்றியை பெரும் திட்டத்தை தெரிவு செய்வதற்காக குறித்த திட்டத்தை பார்வையிடுவதற்காக நேற்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் சென்றுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி இ ரதீசன் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த திட்டம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு உள்ள நிலையில் இந்த திட்டம் தேசிய ரீதியில் வெற்றி பெற வேண்டும் என்பது கள்ளப்பாடு இளைஞர்களின் எதிர்பார்ப்பாகும்.
கருத்து தெரிவிக்க