அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு கூட்டு எதிரணி இன்று ( 18) தீர்மானித்துள்ளது.
கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவியை வழங்கவேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது ஜுலை மாதம் 9, 10 ஆம் திகதிகளில் விவாதம் நடைபெற்று, 10 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.
கருத்து தெரிவிக்க