மட்டக்களப்பில் சுழல் காற்றினால் சேதப்பட்ட வீடுகளுக்கு தலா 10 ஆயிரம் இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்கள் வீசிய பலத்த சுழற் காற்றினால் வீடுகள், கட்டிடங்கள், என்பனவற்றுக்குச் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று சென்ற கள அதிகாரிகள், சேத விபரங்களை ஆராய்ந்ததோடு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சேதமடைந்த வீடுகளுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இலுப்படிச்சேனை, கொத்தியாபுலை, தாண்டியடி, காஞ்சிரங்குடா, புதுமண்டபத்தடி உள்ளிட்ட இன்னும் சில பகுதிகளில் வீசிய சுழல் காற்றினால் அங்கிருந்த சுமார் 62 இற்கு மேற்பட்ட வீட்டு கூரைகள் கபாதிக்கப்பட்டுள்ளன
அதேவேளை ஏராளமான பயன்தரும் மரங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன.
கருத்து தெரிவிக்க