உலகக் கிண்ண தொடரின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 321 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டி கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி, டவுன்டன் மைதானத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இதில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதற்கமைய பங்களாதேஷ் அணிக்கு 322 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில், சாய் ஹோப் 96 ஓட்டங்களையும், எவின் லீவிஸ் 70 ஓட்டங்களையும் சிம்ரோன் ஹெட்மயர் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் மொஹமட் சைஃபுடீன், முஸ்டாஃபிஹூர் ரஹ்மான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் ஷஹில் அல் ஹசன் இரண்டு விக்கெடுகளையும் கைப்பற்றினர்.
கருத்து தெரிவிக்க