உள்நாட்டு செய்திகள்புதியவை

கருத்தடை சர்ச்சை’ – ஷாபிக்கு எதிராக 1003 முறைப்பாடுகள்

குருணாகலை வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக இன்றைய தினமும் (17)  பெண்கள் சிலர் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
இதன்படி குறித்த வைத்தியருக்கு எதிராக இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1003 ஆக உயர்ந்துள்ளது.
குருணாகலை வைத்தியசாலையில் 839 பெண்களும், ஏனைய முறைப்பாடுகள் தம்புள்ளை வைத்தியசாலையிலும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மகப்பேற்றின்போது வைத்தியர் மொஹமட் ஷாபி தங்களுக்கு கருத்தடை செய்திருக்கலாம் என்றும், இதன்காரணமாகவே அவரிடம் சிகிச்சைபெற்ற பின்னர் குழந்தைகள் பிறக்கவில்லை என்றும் முறைப்பாடுகளில் பெண்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மகப்பேற்றின்போது சிங்கள, பௌத்த பெண்களை இலக்குவைத்து கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளார் எனக் கூறப்படும் குறித்த வைத்தியருக்கு எதிராக கடந்த 26 ஆம் திகதி முதல் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க