தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தலைமையில் நாளை (17) பிற்பகல் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றக் கட்டத்தொகுதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, டில்லி பயணம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.
அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டமும் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இவ்வாரம் கூடவுள்ளது.
ஜுன் மாதத்துக்குரிய இரண்டாவது நாடாளுமன்றக்கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க