சினிமா

சூர்யாவின் படத்தில் மோகன்பாபு

‘சூரரை போற்று’ என்ற படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

1980-களில் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருந்த மோகன்பாபுவின் வருகை படத்தி ல் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார்.

தமிழில் ரஜினிகாந்துடன் அன்னை ஓர் ஆலயம், கமல்ஹாசனுடன் குரு உட்பட 20-க்கும் மேற்பட்ட படங்களில் மோகன்பாபு நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சூரரை போற்று படம் மூலம் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு மொழியிலும் வெளியாகிறது.

இதேவேளை கே.வி. ஆனந்த் இயக்கிய காப்பான் படத்தில்  சூர்யா நடித்து முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க