2019ஆம் அண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் ஓய்வூதியக்காரர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் ஜுலை மாதம் முதல் அமுலுக்கு வருகிறது.
இதன்படி, 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற 5 இலட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதிய சம்பள அதிகரிப்பைப் பெறுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், ஓய்வூதிய சம்பளத்தில் நிலவிய முரண்பாடு நீக்குவதன் ஊடாக ஓய்வூதியக்காரர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஓய்வூதியம் பெற்ற அலுவலகப் பணியாளர் உதவியாளர் தரம் ஒன்று ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் 2800ஆல் அதிகரிக்கிறது. முகாமைத்துவ உதவியாளர் தரம் 1 ஓய்வூதியக்காரர்களுக்கு 5 ஆயிரத்து 200 ரூபாவால் சம்பளம் அதிகரிக்கிறது. ஆசிரிய சேவையில் தரம் ஒன்றில் ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் 9,200 ஆல் அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க