வெளிநாட்டு செய்திகள்

ஹொங்கொங்கில் கறுப்பு சட்டை போராட்டம் -பதவி விலக கோரி கோசம்

ஹொங்கொங்கில் இலட்சக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு, கருப்புச் சட்டை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மக்களை, சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், ஹொங்கொங் தலைவர் கேரி லாமை பதவி விலக வலியுறுத்தியும், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹொங்கொங் விக்டோரியா பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணி, மத்திய ஹொங்கொங்கை அடைந்தது. அங்குள்ள அரச அலுவலகங்களுக்கு, வெள்ளைநிற கார்னேசன் மலர்கொத்துக்களுடன் படையெடுத்த போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

ஹொங்கொங் மக்களை சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத்தை எதிர்த்து, மக்கள் போராடிய நிலையில் அச்சட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நிரந்தரமாக ரத்து செய்ய போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க