வெளிநாட்டு செய்திகள்

கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்களின் விபரங்களை வழங்கும் சுவிஸ்

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் 50 பேர் பற்றிய விவரங்களை இந்தியாவுக்கு வழங்க அந்த நாடு நடவடிக்கை எடுத்து உள்ளது.

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கியவர்களின் விபரங்களை வழங்குமாறு சுவிட்சர்லாந்து அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலேயே அவற்றை வழங்க உறுதியளித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியா மற்றும் சுவிட்ஸர்லாந்து இடையே ஒப்பந்தமும் கையெழுத்தானது.

வரி ஏய்ப்பாளர்களைகட்டுப்படுத்தும் வகையில் பா.ஜனதா அரசு விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டது. அதன் ஒரு கட்டமாக சுவிஸ் வங்கியிலும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டது.

இதன் போது, கறுப்பு பணம் பதுக்கியவர்கள் தங்களை பற்றிய விவரங்களை மத்திய அரசுக்கு வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவித்து மேல்முறையீடு செய்தனர்.

எனினும் அதற்கு போதுமான ஆவணங்களை தாக்கல் செய்யாமையினால் அவற்றை சுவிட்சர்லாந்து அரசு தள்ளுபடி செய்துள்ளது. எனவே அந்த 50 பேர் பற்றிய விவரங்கள் விரைவில் இந்தியாவுக்கு கிடைக்கும் என குறிப்பிடப்படுகிறது.

கருத்து தெரிவிக்க