தீவிரவாதத்தை தடுப்பது தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாடு தஜிகிஸ்தானில் நடைபெற்றது.
இதன் ஒரு அங்கமாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நட்பு ரீதியில் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசியாவில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க