அத்துரலியே ரத்தனதேரர் எங்கள் மக்கள் போராடிய கன்னியா மற்றும் நீராவியடி பிரதேசங்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பாரா என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியா தோணிக்கல் ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்கு அமைக்கப்பட்ட அலுவலகம் மற்றும் கடினப்பந்து பயிற்சிக்கூடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் புத்த கோவிலை விரும்பவில்லை என்றால் நாங்களே எடுத்துவிடுவோம் என ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
இது வேடிக்கையாக இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் எமது உறுப்பினர்கள் எமது பாரம்பரிய இடமான கன்னியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் அமைக்கப்படுவது தொடர்பாகவும் முல்லைத்தீவு நீராவியடியில் பிள்ளையார் ஆலயத்தில் புத்த கோவிலை அமைப்பது தொடர்பாகவும் தமது ஆட்சேபனையையும் பல தடவைகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இது தேரருக்கு தெரியாதா? புத்தர் ஞானம் பெற்றநாளான இன்றுகூட நீராவியடியில் சிங்களவர்கள் புத்தகோவில் அங்கு வரவேண்டும் என போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
அத்துரலியே ரத்தன தேரர் உண்மையில் புத்த மதத்தினை பின்பற்றுகின்றவராக அதன் அடிப்படையோடு செயற்படுகின்றவராக இருந்தால் எமது மக்கள் பாராம்பரியமாக புனிதத்துவத்துடன் வழிபடுகின்ற இடங்களை மீள எமது மக்களிடம் கையளிக்கவேண்டும் என மேலும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க