உள்நாட்டு செய்திகள்புதியவை

யாழ். மாநகர மேயர் அர்னோல்ட்டின் யோசனை சபையால் நிராகரிப்பு!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள தமிழ் சங்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாநகர சபையின் நிதியில் இருந்து விமான டிக்கெட்டை கொள்வனவு செய்யும் திட்டத்தை யாழ். மாநகர சபை நிராகரித்துள்ளது.

யாழ். மாநகர மேயர் திரு.இம்மானுவல் ஆர்னோல்ட்  முன்வைத்த யோசனையே இவ்வாறு மாநகர சபையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனக்கான தங்கிமிட வசதி மற்றும் உணவு வசதிகளை ஏற்பாட்டுக்குழு செய்து தரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த யோசனை தொடர்பில் ஆராய்ந்த மாநகர சபை இதற்கான ஏற்பாடுகள் எதும் இல்லை எனக் கூறி குறித்த யோசனையை நிராகரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க