ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்களில்தான் மத ரீதியான செயற்பாடுகள் இடம்பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
சமகால அரசியல் தொடர்பாக பிரதேச மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் எம்.எஸ்.கே.ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே அமீர் அலி இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதனை ஒவ்வொருவரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். எமது ஒவ்வொரு செயற்பாட்டையும் இறைவன் கண்காணிக்கின்றான் என்பதைப்போன்று எமது செயற்பாடுகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தை மதிக்கின்ற மக்களாக நாம் எப்போதும் இருக்க வேண்டும். மோட்டார் சைக்கிள் செலுத்தம் போது தலைக்கவசத்தை அணிவதற்குக்கூட நாங்கள் தயாரானவர்களாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க