தவறு செய்திருந்தால் எந்த வித தண்டனையையும் பெற்றுக்கொள்ள தயார் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பிலும் அதற்கு பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு நேற்று சனிக்கிழமை 15ஆம் திகதி ஹிஸ்புல்லாவிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டது.
காலை முதல் 8 மணித்தியாலங்கள் வழங்கப்பட்ட வாக்குமூலம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள எந்தவொரு குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவை அனைத்தும் பொய்யானவையாகும். எந்தவொரு தவறையும் தான் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அதனை ஏற்று தண்டனையை பெற்றுக்கொள்ள தயார் என ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க