வெளிநாட்டு செய்திகள்

பஹ்ரேனில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

பஹ்ரேன்  பனாமா : பஹ்ரேன்  தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் , மாதம் ஒரு ‘ இலவச மருத்துவ முகாம் ‘ திட்டத்தின் கீழ் , கிம்ஸ் முகரக் மருத்துவமனையுடன் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று (14.06.2019) மாபெரும் இலவச சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது . இம்முகாமில் கண் மருத்துவர் , மகப்பேறு மருத்துவர் , அறுவைச் சிகிச்சை நிபுணர் , பல் மருத்துவர் . குழந்தைகள் நல மருத்துவர் போன்ற சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றதோடு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சையும் வழங்கினர் . கிட்டத்தட்ட 200 பேர் வரை இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர் .

சங்கத்தின் தலைவர் , கலாநிதி . பெ. கார்த்திகேயன் ,  ” உலகிலேயே ஒவ்வொரு மாதமும் ஒரு இலவச மருத்துவ முகாம் நடத்துவது நமது அமைப்பு மட்டும் தான். ” எனக் குறிப்பிட்டார் . அத்துடன் சமூக மேம்பாட்டு துறை செயலாளர். கி. பிரவீன் தனது உரையில் ” மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம் என்ற திட்டம் கடந்த 2017 நவம்பர் மாதத்தில் , பஹ்ரேன்  தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக தொடங்கப்பட்டது . இதுவரை 17 இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்றதன் மூலம் கிட்டத்தட்ட 5000 பேர்கள் வரை பயனடைந்துள்ளனர் . ” என்று குறிப்பிட்டார் .

மேலும் முகாமில் சங்க பொதுச் செயலாளர், க. செந்தில் குமார் , மகளிர் அமைப்பின்  அமைப்பாளர் , அனிதா கார்த்திகேயன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் , கிம்ஸ் மருத்துவ மனையின் விற்பனை அதிகாரி , இராஐசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர் . ‘பஹ்ரேன்  தமிழ் உணர்வாளர்கள்  சங்கத்தின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் பெருமை கொள்ளும் விதத்தில் இருக்கின்றது. ‘ என பஹ்ரேன் வாழ் தமிழர்கள் கூறினர் .

கருத்து தெரிவிக்க