பயங்கரவாதிகளால் முழு முஸ்லிம சமூகமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்று தடுத்து வைக்கப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபியின் மனைவி தெரிவித்துள்ளார்.
தமது கணவர் கைது செய்யப்பட்டமையை அடுத்து தமது குடும்பம் அகதி நிலையில் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 4000 சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை சிகிச்சைகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் தமது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் உண்மையில்லை. ஊடகங்களே எங்களது குடும்பத்தை கொன்று விட்டன என்று வைத்தியரின் மனைவியான வைத்தியர்- இமாரா ஷாபி தெரிவித்துள்ளார்.
தமது கணவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டாலும் பழைய இடத்தில் தொடர்ந்தும் பணியாற்றமுடியுமா? என்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வைத்தியர் ஷாபி தொடர்பில் தாம் பெற்றுக்கொண்ட சாட்சியங்களை குற்றப்புலனாய்வுப்பிரிவினர் எதிர்வரும் 27ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளனர்.
கருத்து தெரிவிக்க