இந்திய- பாகிஸ்தான் போட்டிகள், போர் அல்ல பெருமையாக பாருங்கள் என வசீம் அக்ரம் தெரிவித்துள்ளார்,
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல் குறித்து பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘உலக கோப்பை கிரிக்கட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தை சுமார் 100 கோடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
இது தான் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியாகும். இந்த ஆட்டத்தை இரண்டு நாட்டு ரசிகர்களும் பொறுமையாக பார்த்து ரசியுங்கள் என்பது தான் என்னுடைய செய்தியாகும்.
இந்த போட்டியை பார்த்து இரு நாட்டு ரசிகர்களும் சந்தோஷப்பட வேண்டுமே தவிர இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் சூழலை மோசமாக்கக்கூடாது.
போட்டிகளில் வெற்றி தோல்விகள் நிச்சம் உண்டு. எனவே ஆட்டத்தை பொறுமையாக பார்த்து ரசிக்க வேண்டும். இதனை போர் என்று கருதக்கூடாது.
இந்த போட்டியை போர் என்று நினைப்பவர்கள் உண்மையான கிரிக்கட் ரசிகராக இருக்க முடியாது. உலக கோப்பை போட்டியில் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தினால் பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வெல்ல முடியும். இவ்வாறு வசிம் அக்ரம் கூறினார்.
கருத்து தெரிவிக்க