உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மாற்று கருத்துக்கள்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாவுக்கு பதில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவே வேட்பாளராக வரவேண்டும் என்று பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் விரும்புகின்றன.

இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார வெளியிட்டுள்ளார்.

எனினும் சமல் ராஜபக்ச விரும்பாத வேளையில் அவருக்கு பதிலாக கோட்டாபய வேட்பாளராக நியமிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெசில் ராஜபக்சவை பொறுத்தவரை அவர் வேட்பாளராக வருவதற்கு பெரமுனவில் எவரும் விரும்பவில்லை. அத்துடன் அவரும் அதனை விரும்பவில்லை.

இந்தநிலையில் சமல் ராஜபக்சவை பெரமுனவில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகள் உட்பட்ட சிறிய கட்சிகள் விரும்புகின்றன என்று வாசுதேவ குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஷிராந்தி ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நெருங்கி தரப்பு விரும்புவதாக இன்றைய அரசாங்க செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க