ரயில்களில் யானைகள் மற்றும் ஏனைய விலங்குகள் மோதுவதைத் தடுக்க ரயில்வே திணைக்களம் புதிய யுக்தியொன்றை திட்டமிட்டுள்ளது.
யானை-ரயில் மோதல்களைத் தடுப்பது குறித்த பரிந்துரைகளைச் மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ரயில்வே திணைக்கள குழு இந்த திட்டத்தினை அறிவித்துள்ளது .
இவ்வாறான மோதல்களை தடுக்க ரயில் பாதையின் மேல் பகுதியில் தடங்களையும் நிலக்கீழ் சுரங்க பாதையினையும் அமைக்க திட்டமிட்டுள்ளதாக குறித்த குழுவின் அங்கத்தவர் இரோஷ் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம், போக்குவரத்து அமைச்சு, ரயில்வே திணைக்களம் மற்றும் வனவிலங்குத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டம் தொடர்பான ஆய்வு மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கியது.
குறிப்பாக யானைகள் மோதக்கூடிய 20 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது என பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க