நடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளை ஊடகங்கள் வாயிலாக நாங்கள் பார்த்துக் கொண்டு வருகின்றோம் அதிலே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் அவரது தரப்பு வாதங்களை முன் வைத்து எந்த வகையிலாவது அவரை நியாயப்படுத்தக்கூடிய வாதங்களை முன்வைத்துள்ளதோடு அவரை மறந்து சிற்சில உண்மைகளை அவர் வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
கம்பரெலிய திட்டதின் கீழ் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஒரு மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட உடைமாற்றும் கட்டடம், மற்றும் இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் புணரமைக்கப்பட்ட களுதாவளை அரிசியாலைவீதி, மற்றும் இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் புணரமைக்கப்பட்ட கொம்புச்சந்தி வீதி ஆகியன மக்களின் பாவனைக்குத் திறந்து திறந்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை(15) நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம்(ஜனா) மண்முiனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் திருமதி.க.ரஞ்சினி, பிரதேசசபை உறுப்பினர் எம்.தேவதாசன், மற்றும் கிராம பெரியோர்கள், பொதுமக்கள், கிராம பொது அமப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கலந்து கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைத்து விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
சஹரான் என்பவர் தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவாளராகத்தான் செயற்பட்டவர் என்றும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எப்போதும் தான் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாகத்தான் செற்பட்டதாகவும், ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார் அவ்வாறு பார்க்கப்போனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஹிஸ்புல்லா அவர்கள் எவ்வளவு சாதுரியமாக ஏமாற்றியுள்ளார் என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அவரது சகல சக்தியையும் பதவித்து கடந்த ஜனாதிபதித் தேர்திலில் மகிந்த ராஜபக்ஸவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று செயற்பட்டவர்தான் ஹிஸ்புல்லா அவர்கள். பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஹிஸ்புல்லா அவர்கள் தேலிவியடந்த பின்னர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக செயற்பட்ட ஹிஸ்புல்லா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே சென்று தேசியல் பட்டியல் எம்.பியாக பதவி ஏற்றார். பின்னர இராஜாங்க அமைச்சராகவும், பின்னர் கிழக்கு மாகாண ஆளுனராகவும் நியமனம் பெற்றுள்ளார் என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை எவ்வளவு தூரம் ஹிஸ்புல்லா ஏறமாற்றியுள்ளார் என்பதை நாங்கள் அவதானிக்க வேண்டும். இந்நிலையில் தம்மை தெரிவு செய்த சிறுபான்மை மக்களைப்பற்றிச் சிந்திக்காமல ஜனாதிபதி அவர்கள் தம்மை ஏமாற்றிய ஒருவருக்கு உயர் பதவிகளை வழங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜனாதிபத்தித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கும், சஹரான் என்பவர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் செயற்பட்டவர் எனவும் விசித்திரமான கருத்தை ஹிஸபுல்லா தெரிவித்திருப்பதானது அவர் மகிந்தராஜபக்சவின் பக்கம் பாய்வதற்கு முடிவெடுத்துவிட்டார்போல் தெரிகின்றது. எனவே ஹிஸ்புல்லா என்பவர் ஒரு கொள்கை இல்லாதவர் ஒரு சுயநல அரசியல் செய்கின்றவர் என்றுதான் சொல்லவேண்டும் என அவர் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க