உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தீவிரவாதத்தை ஒழிக்க இலங்கை அரசுக்கும் – இராணுவத்திற்கும் முடியும் – தஜிகிஸ்தானில் ஜனாதிபதி மைத்திரி

உலகம் முழுவதும் தீவிரவாதத்தை ஒழித்து சமாதானத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பதற்காக ஆசியாவிலுள்ள அனைத்து நாடுகளுக்கு இடையிலுள்ள இணைப்பு மற்றும் சகோதரத்துவம் மிகவும் முக்கியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தஜிகிஸ்தான் துஷான்பே நகரில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான ஐந்தாவது ஆசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரி, ஆசியாவின் பலத்தை பலவீனப்படுத்தும் எந்தவொரு தீய சக்திக்கும் இடமளிக்கப் போவதில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் குறித்து ஞாபகப்படுத்திய ஜனாதிபதி, தீவிரவாத்தை முற்றாக ஒழிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினருக்கு முடியுமெனவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறானதொரு தீவிரவாதத் தாக்குதல் எந்தவொரு நாடும் எதிர்படக் கூடாது எனவும் ஆசிய பிராந்தியத்திற்குள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் எல்லா பக்கத்திலும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உரையில் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க